தமிழக அரசியல் களத்தில் சமீபத்தில் உருவான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு இடதுசாரி கட்சிகளின் ஆதரவு முக்கியப் பங்கு வகித்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், பாஜகவின் மறைமுக தலையீட்டைத் தடுக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் தவெக அரசுக்கு தொடர்ச்சியான வலியுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். அவற்றில் மிக முக்கியமானது, மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தை உறுதிப்படுத்துவதில் எந்தவித ஊசலாட்டமும் இருக்கக் கூடாது என்பதாகும்.

“மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது என சிபிஎம் கட்சி வலியுறுத்தி உள்ளது. மாநிலங்களில் அரசு மாறலாம். மாநில உரிமை, கூட்டாட்சியில் சமரசத்திற்கு இடமில்லை” என்று சிபிஎம் தரப்பில் தெளிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தவெக அரசின் கொள்கை நிலைப்பாட்டைச் சோதிக்கும் ஒரு முக்கிய அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தோழர்களுக்கு நேரில் நன்றி சொன்ன விஜய்! தியாக செம்மல் நல்லகண்ணு படத்திற்கு மலர் தூவி மரியாதை!
தேர்தலில் மக்கள் திமுக மற்றும் அதிமுக இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக மாற்று சக்தியாக தவெகவைத் தேர்ந்தெடுத்ததை நினைவூட்டும் வகையில், இடதுசாரிகள் தங்கள் ஆதரவை நிபந்தனைக்கு உட்படுத்தியுள்ளனர். மாநில உரிமைகள் பிரச்சினை தமிழ்நாட்டில் நீண்டகாலமாக முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஆளுநர் அதிகார துஷ்பிரயோகம், மத்திய அரசின் அதிகார மையப்படுத்தல், நிதி ஒதுக்கீடு, கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மாநில அரசுகள் மோதல்களை எதிர்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழக முதல்வர் விஜய்..? கிரீன் சிக்னல் காட்டிய CPM..! முழு ஆதரவு..!