தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது முழு ஆதரவை விஜய்க்கு தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது. ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார்.பெரும்பான்மை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்களது நிபந்தனை ஆற்ற முழு ஆதரவை விஜய்க்கு கொடுத்தது.
இதையும் படிங்க: விஜயை ஆட்சி அமைக்க அனுமதிக்கனும்..! தவெகவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய CPM..!
இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களது முழு ஆதரவை தமிழக வெற்றிக்கழக அரசு அமைவதற்கு கொடுத்துள்ளது. 118 எம்எல்ஏக்களில் இன்னும் இரண்டு எம்எல்ஏக்கள் மட்டும் தேவைப்படும் நிலையில் திருமாவளவன் ஆதரவு தருவதாக தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஆளுநரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஆதரவா.? இல்லையா.? 24 மணி நேரத்தில் முடிவு..! சிபிஎம் தேசிய செயலாளர் தகவல்..!