தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்ற வருகிறது. பீகாரில் நடந்ததை போல தமிழகத்தில் நடக்கக் கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் எஸ் ஐ ஆர் பணியை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழக அரசு கடுமையாக இதனை எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்காணிக்க தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: CAA தான் அவங்க நோக்கம்..! இது தேர்தல் ஆணையத்தின் வேலையா? வெளுத்து வாங்கிய திருமா...!
மாவட்டம் தோறும் 16 பேர் கொண்ட குழுக்களை தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அமைத்துள்ளது. இளைஞரணி, மாணவரணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் இதில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குரிமையை பாதுகாக்க தேவையான நடவடிக்கை கால நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: வேண்டவே வேண்டாம்... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...!