திருவள்ளூர் அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இளைய மகன் காதலிப்பதையும் மூத்த மகன் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவதையும் தாய் கண்டித்ததால் மன உளைச்சலில் இரண்டு மகன்களும் விஷ மருந்து அருந்தி சிகிச்சை பலனின்று பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் நுங்கம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது கம்மவார்பாளையம்
கிராமத்தை சேர்ந்தவர்கள் (வன்னியர் சமூகம் ) மோகன் -ஜெயலட்சுமி இத்தம்பதிகளுக்கு விக்னேஷ் -26 கணேஷ் -24 என்ற இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர். ஜெயலட்சுமி இவருடைய கணவர் மோகன் ஓராண்டுக்கு முன்பு மனைவியிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இவர்களின் இளைய மகன் கணேஷ் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார் அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த (தலித் )பெண்ணை கணேஷ் ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: `ஊதி ஊதி பெருசாக்காதிங்க..' - கையெடுத்து கும்பிட்ட ராமதாஸ்...!
இளைய மகன் கணேஷ் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பதை தாய் ஜெயலட்சுமி தொடக்கத்திலே கண்டித்துள்ளார், அதேபோன்று மூத்த மகன் விக்னேஷ் நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையாகி வருவதையும் கண்டித்துள்ளார்.
இளைய மகன் கணேஷ் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருவதையும் மூத்த மகன் குடி போதைக்கு அடிமையாக்கி வருவதையும் தாய் கண்டித்தும் இருவரும் மீறியும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று இரவு 8 மணியளவில் மகன்கள் இருவரும் தான் பேச்சை கேட்காததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என தாய் தனது கையில் வைத்திருந்த விஷ மருந்தை மகன்கள் முன்பாக அருந்த முயற்சித்துள்ளார்,
அப்போது மகன்கள் இருவரும் தாயிடமிருந்து விஷ மருந்தை பிடிங்கி இருவரும் அருந்தியுள்ளனர். விஷ மருந்து அருந்திய இருவரும் கவலைக்கிடமான நிலைக்கு சென்றுள்ளனர் ஜெயலட்சுமி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் இளைய மகன் கணேஷ் சிகிச்சை பலனின்றி பலியானார். இன்றைய தினம் மூத்த மகன் விக்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மகன் காதலித்து வருவதும் மற்றொரு மகன் குடிபோதைக்கு அடிமையாகி வருவதை தாய் கண்டித்ததால் சகோதரர்கள் இருவரும் தாய் முன்பாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
இதையும் படிங்க: கவின் கொலை வழக்கில் இன்று முதல் அதிரடி ஆரம்பம்; சிபிசிஐடி கைக்கு மாறிய முக்கிய ஆவணங்கள்...!