தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்த நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பில் கடும் பிளவு ஏற்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையிலான தனி அணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
இந்தப் பிளவு சட்டமன்ற நடவடிக்கைகளிலும், குறிப்பாக கொறடா நியமனம் தொடர்பாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். ஈபிஎஸ் தரப்பில் சுமார் 22 எம்எல்ஏக்களும், வேலுமணி-சண்முகம் தரப்பில் 25 எம்எல்ஏக்களும் இருப்பதாகக் கூறப்பட்டது. இரு தரப்பும் தங்கள் சொந்த கொறடாவை நியமித்துக் கொண்டனர்.

பல கட்ட ஆலோசனைகள் மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன. இந்த நிலையில், சபாநாயகரிடம் அளித்த தகுதி நீக்கம் மனுக்களை தாங்கள் வாபஸ் பெற்றதாக எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். எங்களுக்குள் கருத்து வேறுபாடு தான் இருந்தது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கூறியதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: சாமர்த்தியமாக சாதித்து காட்டிய இபிஎஸ்..! முடிஞ்சது பிரச்சனை..! மனுக்கள் வாபஸ்..!!
குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை பரிசீலிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் எனவும் எஸ்.பி வேலுமணி கூறினார். எங்களுக்குள் பிளவு இல்லை என்றும் கருத்து வேறுபாடு தான் இருந்தது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இப்போது அதிமுகவில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார். பரஸ்பர தகுதி நீக்கம் கோரி மனு அளித்திருந்த நிலையில், அதனை வாபஸ் பெற்றுள்ளதாகவும், வெற்றி, தோல்வி சகஜம் தான் என்றும் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!