மதுரையில் இன்று நடைபெற்றப் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலானத் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றி பெறும். குறைந்தபட்சம் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம். திமுக கூட்டணி ஒற்றை இலக்க இடங்களிலேயே சுருங்கிவிடும். தமிழக மக்கள் திமுக அரசு மீது மிகுந்தக் கோபத்தில் உள்ளனர்; குறிப்பாக அரசு ஊழியர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். கடந்த 45 நாட்களில் மட்டும் முதல்வர் 26 போலி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ‘கலைஞர் கனவு இல்லம், அன்புச் சோலை’ போன்றப் பெயர்களில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எவ்வித ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகம் கண்ட மிக மோசமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் எனச் சாடினார்.
இதையும் படிங்க: 70 நாட்களில் தெருநாய் பிரச்சினை தீரும்! தவெக கருத்து கேட்பு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் உறுதி!
திமுக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து சிபிஐ (CBI) விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பாமக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பணத்தை வைத்துத் தேர்தலைச் சந்தித்துவிடலாம் என திமுக நினைக்கிறது. ஆனால், உலக நாடுகளைப் போலத் தமிழகத்திலும் இளைஞர் புரட்சி ஏற்பட்டு இந்த ஆட்சி தூக்கியெறியப்படும். மேலும், தனதுத் தந்தை ராமதாஸைச் சுற்றிச் சில துரோகிகள் இருப்பதாகவும், ஜி.கே.மணி போன்றவர்கள் தவறானத் தகவல்களை அவருக்கு அளித்து வருவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மதுரையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானப் பாமக இளைஞரணித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கையெழுத்து போட்டால் மட்டுமே ஆதரவு! விக்கிரமராஜா அதிரடி நிபந்தனை!