கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே சாலைச் சென்ற அரசு பேருந்தில் புகை வெளியேறி பழுதாகி நின்ற நிலையில், பேருந்து கண்ணாடியை உடைத்து தப்பி பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை சுமார் 60 பயனிகளை ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று, கோவை ஒத்தகால்மண்டபம் அருகே வந்த போது, ரேடியேட்டர் பழுதாகி பேருந்தின் இயந்திரத்தில் புகை கிளம்பியது. மேலும் தீயுடன் புகை வருவதை பேருந்து ஓட்டுநர் உணர்ந்தார்.
இந்த நேரத்தில், பயணிகள் பேருந்துக்குள் புகையும் வெப்பமும் அதிகரித்ததை உணர்ந்து, அதிர்ச்சியுடன் வெளியேற முயற்சித்தனர். ஆனால், கதவு ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் திறக்க முடியவில்லை. பயணிகள் அவசரத்தில் பேருந்து ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினர்.
இதையும் படிங்க: அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்கள்.. விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!
இதில், ஒரு முதியவர் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்தில் ஏற்பட்ட புகை மற்றும் தீவிபத்தின் காரணம் குறித்து மின்வாரியம் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: “கூட்டணி உடைவதற்கான அறிகுறிகள் தெரிகிறது” - தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த அண்ணாமலை...!