திருத்தணி ரயில் நிலையம் அருகே நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் பயணித்த ஒடிசாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கே. சூரஜ் என்பவர், நான்கு 17 வயது சிறுவர்களால் பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இந்த சிறுவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவே இத்தாக்குதலை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயிலில் பயணிக்கும்போதே அவர்கள் சூரஜின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். சூரஜ் அவர்களை முறைத்துப் பார்த்ததாக தவறாக எண்ணியோ அல்லது வெறுமனே ரீல்ஸ் உள்ளடக்கத்துக்காகவோ அவரைத் தாக்கத் தொடங்கினர்.
ரயில் திருத்தணி நிலையத்தை அடைந்ததும் அவரை கட்டாயப்படுத்தி இறக்கி, அருகிலுள்ள கைவிடப்பட்ட ரயில்வே குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று மூவர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். நான்காவது சிறுவர் இத்தாக்குதலை மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் நலமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஒடிசா மாநில இளைஞர் சூரஜ் தற்போது எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்ற எந்த விவரமும் தெரியாமல் உள்ளது என அதிமுக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ் எங்க தொகுதியில தான் போட்டியிடனும்... அதிமுகவில் 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிப்பு...!
தமிழகத்தை நம்பி வந்த அவரை, ஒழுங்காக மருத்துவ சிகிச்சை கூட பார்க்காமல் திமுக அரசு அனுப்பி வைத்துவிட்டது என கூறியுள்ளது. 24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பி வைக்கும் நிலையிலா சூரஜ் மருத்துவமனைக்கு வந்தார் என்றும் இதை சொல்வதற்கு திமுக அரசு வெட்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சாடியுள்ளது. சூரஜ்ஜின் நலத்தை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை என்றும் பொம்மை முதல்வர் பதில் சொல்லியே ஆகவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போலி வாக்குறுதி முதல்வருக்கு புத்தாண்டு வாழ்த்து... அதிமுக கடும் விமர்சனம்...!