சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த திமுக பாக முகவர்கள் மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள் மற்றும் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் விதம் குறித்து அவர் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஏற்கனவே 'ஓங்கிய தமிழ்நாடு' பரப்புரை மூலமாக ஒரு கோடியே 14 லட்சம் குடும்பங்கள் நமது கழகத்தோடு இணைந்துள்ளனர். இதில் ஒரு வாக்கு கூட சிதறாமல் உதயசூரியன் சின்னத்திற்கும், நமது கூட்டணி கட்சி சின்னங்களுக்கும் விழுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே இரண்டு, மூன்று முறை ஒவ்வொரு வீட்டையும் நாம் சந்தித்துவிட்டோம். அடுத்த கட்டமாக மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சுடுகாட்டில் வடிவேலு புலம்புவது போல முதல்வர் புலம்புகிறார்: மதுரையில் செல்லூர் ராஜு கிண்டல்!
உங்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 100 வாக்காளர்களைத் தொடர்ந்து அணுக வேண்டும். தேர்தல் நாளன்று அவர்களை பூத்திற்கு அழைத்து வந்து வாக்களிக்கச் செய்வதுடன், வாக்குப்பதிவு முடிந்து இயந்திரங்களுக்கு சீல் வைத்து எடுத்துச் செல்லும் வரை நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள்தான் அறிவாலயத்தின் அஸ்திவாரம்; உங்களை நம்பித்தான் மொத்த கழகமும் இருக்கிறது" என்று நிர்வாகிகளுக்குப் புகழாரம் சூட்டினார்.
கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்ட அவர், "சென்னைக்கு நாம் செய்துள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், இளைஞர் புத்தாண்டு பூங்கா போன்ற திட்டங்களை எடுத்துச் சொல்லுங்கள். குறிப்பாக, பிப்ரவரி 15-ஆம் தேதி திறக்கப்பட உள்ள புதிய போக்குவரத்து மையக் கட்டிடம் குறித்தும் மக்களிடம் விளக்குங்கள். 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை நாம் உறுதி செய்துள்ளோம். நமது அரசின் சாதனைக் கையேட்டை எப்போதும் கையில் வைத்திருங்கள்" என அறிவுறுத்தினார்.
இது வெறும் தேர்தல் அல்ல; தமிழ்நாட்டைச் சேர்ந்த அணியா அல்லது டெல்லி அணியா என்பதை முடிவு செய்யும் தேர்தல். தமிழ்நாட்டின் சுயமரியாதையைக் காக்க திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய அவசியத்தை மக்களிடம் நட்பு ரீதியாக எடுத்துச் சொல்லுங்கள் என முதலமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார். 2026-ல் திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வை வீழ்த்துவதே இலக்கு என அவர் சூளுரைத்தார்.
இதையும் படிங்க: அல்வா கொடுத்த பாஜக; ஆட்டம் போடும் தவெக! அமைச்சர் தா.மோ.அன்பரசன் அனல் பறக்கும் பேச்சு!