கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும் சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆரஞ்சு அலட் விடுக்கப்படுவதாகவும் 25 மற்றும் 26ம் தேதிகளில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: செம்ம மழை காத்திருக்கு..! இந்த மாவட்ட மக்கள் உஷாரா இருந்துக்கோங்க..!

இது மட்டுமல்லாது திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஷாக் அடிக்க போகுதா மின் கட்டணம்.? ஜூலை முதல் கட்டணம் உயர்வு..? திமுக அரசை வறுத்தெடுக்கும் ராமதாஸ்.!!