ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி அருகே அமைந்துள்ள சிறிய கிராமமான பசும்பொன்னில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் தேதி ஒரு மாபெரும் விழா நிகழ்கிறது. அது, சுதந்திர போராட்ட வீரரும், அரசியல் தலைவரும், ஆன்மீகவாதியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் விழா தேவர் ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கர் தேவர் சிலைக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்துவது வழக்கம்.
அதன்படி, இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், டிடிவி தினகரன், சசிகலா உட்பட ஏராளமான அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முத்துராமலிங்க தேவர் உயிருடன் இருந்திருந்தால் பாஜகவிற்கு ஆதரவு கிடைத்திருக்கும் என்று கூறினார்.
இதையும் படிங்க: பசும்பொன்னில் ரூ.3 கோடியில் தேவர் திருமண மண்டபம்… முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு…!
தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் விரிவுபடுத்தப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். திமுகவை தோற்கடிப்பதில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது என்றும் அவர் பேசினார். கூட்டணி என்று கேட்டால் பலவீனம் என்று அர்த்தம் இல்லை என்றும் திமுகவை தோற்கடிப்பதில் விஜய்க்கும் பங்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார். விஜயை கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைத்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தை பதம்பார்க்க தயாராகும் தீவிர புயல்! தாண்டவம் ஆடும் வடகிழக்கு பருவமழை! டெல்டா வெதர்மேன் அப்டேட்!