ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தலில் வாக்கு திருட்டு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டினார், குறிப்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டதாகவும், 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியானவை என்றும் கூறினார்.
ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட ஐந்து வகையான முறைகேடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து முறைகேடுகளுக்கு உடந்தையாக இருப்பதாகவும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை அழித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: ஓட்டு திருடிதான் நீங்க ஜெய்ச்சீங்களா ராகுல்? பூந்து விளாசிய அண்ணாமலை!
தேர்தல் ஆணையம் இதை மறுத்து, ஆதாரங்களை உறுதிமொழி பத்திரத்தில் சமர்ப்பிக்கக் கோரியது, இல்லையெனில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரித்தது. ராகுல், தனது குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் தரவுகளையே பயன்படுத்துவதாகவும் பதிலளித்தார்.

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்களை போலீசார் கைது செய்தனர். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வாக்கு திருட்டு புகார் தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எதிர்க்கட்சிகள் கூறும் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளதாக கூறினார்.
இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். காமராஜர் காலத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தை குறை கூறியவர்கள் திமுகவினர் என்று குற்றம் சாட்டிய தமிழிசை, திமுக வெற்றி பெறும் போது மட்டும் வாக்கு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!