தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு காலமும் பதவி உயர்வுக்கான தகுதிகாண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் முதல்வர் கருணானிதி வழியில் அரசு ஊழியர்களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக திராவிட மாடல் அரசு என்றென்றும் தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் எற்கனவே கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணத்தை 5 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கருணை அடிப்படையிலான வேலை..! அனைத்து தலைமைச் செயலாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு, திருமண முன்பணம் ரூ.5 லட்சம், பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிப்பு, ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல் என்பது உட்பட 9 முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதில், திருமண முன்பண அறிவிப்பை செயல்படுத்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். முன்னதாக, தேவையின் அடிப்படையில் பணிக் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் திருமண முன்பணமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!