சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி. திருச்சி சிவா, காமராஜர் குறித்து கலைஞர் கருணாநிதி கூறியதாக சிலவற்றை திருச்சி சிவா பகிர்ந்து கொண்டார். மின் பற்றாக்குறை குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டனம் தெரிவித்து இருந்தார். இருந்தாலும் அவருக்கு குளிர்சாதன வசதி இல்லையென்றால், உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதற்காக அவர் தங்கும் விடுதி உட்பட அனைத்து அரசு பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி ஏற்படுத்த கருணாநிதி உத்தரவிட்டதாக கூறினார்.
காமராஜரின் உயிர்பிரிகையில், கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதி காப்பாற்ற வேண்டும் காமராஜர் சொன்னதாக பேசி இருந்தார். காமராஜர் குறித்த பேச்சுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எளிமையின் சிகரமாகவே வாழ்ந்து மாபெரும் தலைவரான காமராஜருக்கு ஏசி வைத்து கொடுத்தோம், ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டுமென்று கலைஞரைப் பார்த்து சொன்னார் போன்ற திருச்சி சிவா கூறியது மிகுந்த மன வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.பெருந்தலைவர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களை தேடி தேடி அனுபவித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அவர் மீதான பணிச் சொற்களை சரியாக எதிர்க்கவில்லை என்பதை மக்களின் கருத்து என்று குறிப்பிட்டார்.

அவருடைய அறையில் ஏசி இருந்தது என்று திமுக உடன் பிறப்புகள் வட்டமிட்டு பதிவுகள் வெளியிடுவது மற்றும் கடைசி நாள் படுத்து இருக்கும் போது கூட ஏசி ஓடிக்கொண்டிருந்தது என்றும் கொச்சையாக பதிவிடுவது எல்லாவற்றையும் விட மனதை ரணப்படுத்துவதாகவும் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். எனவே தமிழக முதலமைச்ச ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் அவர்களின் நேரான இயக்கங்கள் பிறப்புகளையும், 200கான இணைய உடன்பிறப்புகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: காமராஜர் சர்ச்சை.. திமுக மன்னிப்பு கேட்டே ஆகணும்..! அன்புமணி கறார்..!
மேலும், நாட்டுக்கு உழைத்த ஒரு எளிய தலைவனை.. நிந்தனை செய்யும் திமுகவுடன்.. ஓட்டுக்காக ஒட்டிக்கொண்டு இருக்கும் காங்கிரசின் மென்மையான எதிர்ப்பு நிலை கண்டிக்கத்தக்கது என்றும் பெருந்தலைவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதை காங்கிரஸ் எதிர்ப்பதும் வெறும் பெயரளவில் தான் இருக்கிறது என்பதும் வேதனை என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கம்பி கட்டுற கதையெக்கெல்லாம் சொல்லிகிட்டு.. திருச்சி சிவாவிற்கு சீமான் பதிலடி..!