டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை அமலாக்கத் துறை சோதனையில் ஈடுப்பட்டது. அதில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது ஆகியவற்றில் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.

இதனை எதிர்த்து அமலாக்கத் துறையின் இந்த சோதனையை அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என உத்தரவிடக் கோரியும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: புதிதாக அமையவருக்கும் மதுபான கடை.. எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டம்..!

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ''டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடு செய்ததாக பல வழக்குகளை பதிவு செய்துள்ளது. பணி மாறுதல் மற்றும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ய மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, ஆதாரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் டாஸ்மாக் நிர்வாக பொது மேலாளர் சங்கீதா சுய விருப்பத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. மேலும், பார் ஒப்பந்தம், போக்குவரத்து ஒப்பந்தம், ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பான ஆவணங்களை முறைகேடு செய்து விட கூடாது என்பதற்காக சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் நடந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், குற்றம் உறுதி செய்யப்பட்ட பின்பே அமலாக்கத்துறை கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும்

உரிய முறையில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றதா? பெண் ஊழியர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்? என கவனிக்கப்பட வேண்டும் என வாதிட்டார். டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்றைய விசாரணைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: குடியிருப்பு பகுதிகள் அருகே மதுபான கடைகள்.. தவெக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்..!