சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர் பகுதியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குறைந்தபட்ச தண்டனை கொடுக்குமாறு ஞானசேகரன் தரப்பு கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், தீர்ப்பை முன்கூட்டியே கணிக்க முடியாது குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லாரும் தண்டனையை குறைக்க சொல்லி கேட்பது இயல்பு தான்.

குற்றம் சாட்டப்பட்டவர் தனது குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும். அப்பா, தங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் குடும்பம் உள்ளது என்பதை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிபதி வழங்கக்கூடிய தீர்ப்பு என்பது அவருக்கான நீதியாக இருக்க வேண்டும் தீர்ப்பாக இருக்கக் கூடாது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வருத்தமாவது தெரிவிச்சீங்களா? தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட தினம்! ஸ்டாலின், எடப்பாடியை வறுத்தெடுத்த சீமான்!
சென்னை அருகே நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய தமிழக வெற்றி கழகத்தினர் இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான்,

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் என்ன அரசியல் செய்யப் போகிறார்கள். தமிழக வெற்றிக்கழகத்தின் பெண் பிள்ளைகள் நிர்வாகிகள் உதவும் போது அதை தடுத்து நிறுத்தி வயிற்றில் மிதிக்கும் அளவுக்கு என்ன குற்றம் தேச துரோகம் ஆகிவிட்டதா? முதலில் இந்த தலைவர்கள் அரசியல் ஆக்கறாங்க. அரசியல் பேசுறாங்க என்று பேசும் தலைவர்கள் எது அரசியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதை மட்டும் பேசி விட்டு செல்கிறோம்.

எதுதான் அரசியல் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது? மீனவர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசினால் அரசியல் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியது அரசியல் அல்ல உதவி என்றார். எல்லாவற்றிலும் தர்மத்தை கடைபிடிப்பவர்கள் கூட்டணியில் மட்டும் தர்மம் வாழ்கிறது. கூட்டணி தர்மத்திற்காக இது போன்று பேசுகிறது மனசாட்சியுடன் செல்வ பெருந்தகை பேசுகிறாரா?காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி வைத்திருந்தால் இப்படி பேசுவாரா?
கல்விக்கு நீதி கொடுக்கவில்லை என தமிழக முதல்வர் குற்றம் சாட்டையை குறித்து கேள்விக்கு: மோடியை சந்தித்து மாட்டு வியாபாரி போல் கை குலுக்கி பேசிய போது நிதி பற்றி பேச வேண்டியது தானே. மூன்று நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்து விட்டு இப்போது செல்கிறார்.

நீதி கொடுக்கவில்லை என்றால் எதற்காக வரி செலுத்துகிறீர்கள் வரி செலுத்தாமல் நிறுத்தினால் மறுபடியும் அமலாக்கத்துறை வரும். நூலகம் நினைவிடம் சிலைகள் கட்டுவதற்கு மட்டும் நிதி எங்கிருந்து வருகிறது அவர்களது சொத்தை விட்டு கட்டுகிறார்களா என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாதகவிற்கு விவசாயி சின்னம் ஒதுக்கீடு..! சந்தோஷத்தின் உச்சத்தில் சீமான்..!