திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கம் முன்னிட்டு அங்கு பயணம் செய்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக ஜூலை 5ஆம் தேதியில் இருந்து 7ம் தேதி வரைக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலா 600 சிறப்பு பேருந்துகளை இயக்க இருக்காங்க. இப்போ எந்தெந்த இடங்கள்ல இருந்து இந்த பேருந்துகள் இயக்கப்படுகிறது என்ற முழு விவரங்களை பார்க்கலாம்.

சென்னை, திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இந்த 600 சிறப்பு பேருந்துகளை இயக்குறாங்க. அதுலையும் இந்த சிறப்பு பேருந்துகளுக்காக திருச்செந்தூரில் தற்காலிகமாக மூன்று பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கு. அதில் முதலாவது வெட்டவெளி மடம் என்கிற இடத்திற்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக திருநெல்வேலி சாலையில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கு. இங்க எந்தெந்த ஊர்யில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் செல்லும்னு பார்த்தோம்னா திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சுரண்டை, சங்கரன் கோவில் மற்றும் ராஜப்பாளையம் பேருந்துகள் வரும்.
இதையும் படிங்க: பறிபோன பதவி...கை விரித்த தலைமை…புதிய கட்சி தொடங்கிய பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

இதே மாதிரி அடுத்த தற்காலிக பேருந்து நிலையம், ஆதித்தனார் சிலைக்கு எதிர்ப்புறமா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேஸ்வரம், மதுரை, கோவை, சேலம், திருச்சி, சென்னை இந்த ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள்இயக்கப்படும். மூன்றாவது தற்காலிக பேருந்து நிலையம் தெப்பக்குளத்திற்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில், சாத்தான்குளம், திசையன் விளை, வள்ளியூர் ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த மூன்று தற்காலிக பேருந்து நிலையங்களை பொறுத்தவரைக்கும் அங்க இருந்து நீங்க திருச்செந்தூர் கோயிலுக்கு போறதுக்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கு. ஒவ்வொரு தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்தும் தலா 10 பேருந்துகள்ன்னு மொத்தம் 30 பேருந்துகள் கோயிலுக்கு இயக்கப்பட இருக்கு. இதுதான் திருச்சந்தூர் கோயில் குடமுழக்கம் முன்னிட்டு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடு.
இதையும் படிங்க: தனித்து களமிறங்க முடிவெடுத்த விஜய்... தாக்கு பிடிக்குமா தவெக? - அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?