அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சி விமான நிலையம் சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும் நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்துவதும் முதலமைச்சரின் பொறுப்பு என தெரிவித்தார்.

தமிழக மக்கள் நலனுக்காக உகந்த அணுகுமுறை என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றது குறித்து பேசிய திருமாவளவன், இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடயது என்றும் பாஜக திமுகவோடு நெருங்கி விடக்கூடாது நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்ற பதட்டம் அதிமுகவிடம் வெளிப்படுவதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நான் ரெடியாகிட்டேன்! பழைய மாவை அரைக்கிறார் பழனிசாமி.. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறிய அவர், யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார் .
இதையும் படிங்க: தேர்தலில் 234 தொகுதிகளும் திமுக கூட்டணிக்குதான்.. அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாறுமாறு.!!