தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரை நிகழ்த்தினார். அப்போது, பரந்தூர் மக்கள் தொடர்பாகவும், அவர்களைப் பிரச்சினைகள் குறித்தும் பேசினார். சாதி மதம் கடந்து ஒன்றாக இணைந்து போராடிக் கொண்டிருக்கிற பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் பேச வேண்டும் என கூறினார்.

உங்கள் அமைச்சர்களும் அதிகாரிகளும் சென்று பேசக்கூடாது., நீங்களே நேரில் சென்று சந்தித்து பேச வேண்டும்., அந்த இடத்தில் விமான நிலையம் வராது என்ற உத்தரவாக்கத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்., இதையெல்லாம் செய்யாமல் எல்லாவற்றையும் கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், பரந்தூர் பகுதி விவசாய மக்களை, பொதுமக்களையும் நானே கூப்பிட்டு வந்து தலைமைச் செயலகத்தில் உங்களை நேரில் சந்தித்து முறையிடும் நிலைமையை உண்டாகும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: தவெக கொள்கை தலைவராக அம்பேத்கர் இருந்திருக்க மாட்டார்.. ஓபனாக அடித்த திருமாவளவன்!!

தவெக தலைமையிலான கூட்டணி திமுக பாஜகவுக்கு எதிரான கூட்டணி தான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், திமுகவையும் பாஜகவையும் எதிர்த்து தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் என்றும் இது இறுதியான தீர்மானம் அல்ல உறுதியான தீர்மானம் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரிகள் பட்டியலில் அதிமுக உள்ளதா இல்லையா என கேள்வி எழுப்பினார். அதிமுகவை விஜய் விமர்சிக்கிறாரே தவிர கொள்கை எதிரி என்று குறிப்பிடவில்லை என சுட்டிக்காட்டினார். அதிமுக பற்றி விஜய் எதையும் தெரிவிக்கவில்லை என்பது ஏனென்று தெரியவில்லை எனவும் கூறினார்.

பரந்தூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிடில் பரந்தூர் மக்களுடன் தலைமைச் செயலகம் வருவேன் எனக் விஜய் கூறிய தொடர்பான கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்தார். அப்போது, பரந்தூர் மக்களுக்கு விஜயின் போராட்டம் நீதி பெற்று தருமானால் அதை வரவேற்கிறேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியை பிளவுபடுத்த இலக்கு.. விசிக ஒருநாளும் பலிகடாவாகாது.. திருமாவளவன் உறுதி!!