நெல்லையில் கவின்குமார் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 21ம் நூற்றாண்டில் கூட ஜாதியை உயர்த்திப்பிடித்து நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் வெட்கக்கேடானது என்று விமர்சித்து வருகின்றனர்.
சாதிப் பெருமையில் என்ன உள்ளது எனவும் மனிதர்களை சக மனிதனாக பார்ப்பது கிடையாது என்றும் குற்றம் சாட்டி உள்ளனர். சாதிய ஆணவ படுகொலைகள் எடுபடும் நபர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கவினின் ஆணவ படுகொலைக்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் தொடர்ந்து போராடி வருகின்றனர். நிதியும் வேண்டாம், நிவாரணமும் வேண்டாம், வேலையும் வேண்டாம்.. தங்கள் பிள்ளைக்கு நீதிதான் வேண்டும் என்று விடாப்பிடியாக போராடி வருகின்றனர். கவின் தந்தையிடம் பேசிய திருமாவளவன், நேரில் வந்து சந்திப்பதாக கூறி ஆறுதல் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: பாஜகவோட சேர்ந்தா அவ்வளவுதான்! நல்ல எண்ணத்தில் தான் பேசினேன்... இபிஎஸ்க்கு திருமா பதிலடி!

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். நெல்லையில் நடைபெற்ற ஆணவக் கொலை அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். சுர்ஜித் மற்றும் அவரது தாய், தந்தையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
எஃப் ஐ ஆர் இ குறிப்பிட்டுள்ள நபர்களை காவல் துறை கைது செய்வதில் தயக்கம் காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பினார். சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டார்கள் என தெரிவித்த திருமாவளவன், சிபிசிஐடி போலீசார் நேர்மையுடன் வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்தி பிடிப்பதாகவும் சாதி பெருமிதத்தின் அடிப்படையில் இது போன்ற கொலைகளை ஊக்கப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எங்க புள்ளைய கொன்னுட்டானுங்க மா! கனிமொழி எம்.பியிடம் கவின் குடும்பத்தார் புகார்..!