திருப்பூர் மாவட்டம் கவுண்டநாயகன் பாளையம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது நீட்டிக்க தொட்டியின் மேல் இருந்து நான்கு பேர் கீழே இறங்கி வந்த நிலையில், மக்களை பார்த்தவுடன் தப்ப முயன்றனர். மது போதையில் இருந்த நான்கு பேரையும் பொதுமக்கள் மடக்கி பிடிக்க முயன்ற போது அதில் இரண்டு பேர் சிக்கினர்.

அவர்களிடம் விசாரித்ததில் நிஷாந்த், சஞ்சய் என்பதும் மது அருந்துவதற்காக நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறி உள்ளதும் தெரிய வந்தது. இதனையடுத்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் இரண்டு பேரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

ஏற்கெனவே வேங்கைவயல் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருப்பூரில் நடந்துள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “நவீன கோமாளி ஸ்டாலின்; ஒட்டுண்ணி ரகுபதி” - திமுகவை பங்கமாய் கலாய்த்த செல்லூர் ராஜூ!