திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சுமார் 7 அடி ஆழமுள்ள சாயக்கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்களுள் 3 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் நடந்த கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சோகம்..!

இந்நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க சாய ஆலை நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது
.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..! அதிர்ச்சியில் திருப்பூர் மக்கள்..!