திருச்செங்கோடு அருகே மாரியம்மன் கோவிலில் எஸ்ஐஆர் படிவங்கள் கேட்பாரற்று கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள குமரமங்கலம் பகுதியில் வாக்குச்சாவடி எண் 77க்கு சொந்தமான சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியலின் பணியின் பொழுது அங்கு எஸ்ஐஆர் பணியில் இருந்த அங்கன்வாடி ஊழியர், கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கிருந்த எஸ்ஐஆர் படிவங்களை எடுத்துச் சென்றுள்ளனர். அந்த எஸ்ஐஆர் படிவத்தை எடுத்த குமரமங்கலம் மற்றும் இலச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சில அதிமுகவினர் அதனை குமரமங்கலம் பகுதியில் இருக்கின்ற மாரியம்மன் கோவில் டேபிள் முன்பு கொட்டி இருக்கின்றார்கள்.
இதையும் படிங்க: "மக்கள் குழப்பமடைய வேண்டாம்... அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்" - சர்ச்சைக்கு எண்டு கார்டு போட்ட தம்பிதுரை...!
தொடர்ந்து அதிமுகவினர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் எஸ்ஐஆர் படிவம் கேப்பாரற்று கிடைந்ததாகவும், மக்கள் தங்களுடைய முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொடுத்து பதிவு செய்த பிறகும் அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதாக கூறியுள்ளனர்.
இந்த செய்தி தீயாய் பரவி வந்த நிலையில்இந்த செய்தி தீயாய் பரவி வந்த நிலையில், குமரமங்கலத்தில் வாக்குச்சாவடி 77க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்தப் பணிகளின் போது சேகரிக்கப்பட்ட படிவங்கள் தூக்கி வீசப்படவில்லை என்றும், மஞ்சள் பை ஒன்றில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த படிவங்களை அதிமுகவினர் வேண்டுமென்று எடுத்துச் சென்று கோயிலில் வீசியதோடு, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல் குமரமங்கலத்தில் SIR பணி ஈடுபட்டு வரும் அதிகாரியும் தான் மீட்டிங்கிற்கு சென்ற சமயத்தில் யாரோ சிலர் படிவங்களை எடுத்துச் சென்று விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தாங்கள் அனைத்து படிவங்களையும் சரியான முறையில் நிரப்பிய பிறகே தாங்கள் மேல் அதிகாரிகளுக்கு கொடுக்கிறோம். ஆனால் தற்போது இது மாதிரியான குற்றச்சாட்டு எழுந்திருப்பது மன வேதனை அளிக்கிறது என சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் தற்பொழுது அதிமுகவினர் இந்த எஸ்ஐஆர் படிவங்களை கோவில் வாசலின் முன்பு கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்களுக்கு வாக்குரிமை... பாஜகவின் சதித்திட்டம்... அம்பலப்படுத்தும் செல்வப் பெருந்தகை...!