தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், கழக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்சிப் பதவி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: கலைஞர் பிறந்தநாள்; களை கட்டப்போகும் தமிழகம்... நாளை 102 இடங்களில் நிகழ்ச்சி!!

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை, கழக இளைஞரணி செயலாளர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் செய்தித் துறை செய்தி குறிப்பை வெளியிட்டது சர்ச்சையானது. இதை அடுத்து இந்தச் செய்திக்குறிப்பு நீக்கப்பட்டு, மற்றொரு செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில் கட்சி பொறுப்பு இடம்பெறவில்லை. எனினும், அதிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று வருவதற்கு பதில், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கழக இளைஞரணி செயலாளரும் என்பதை நீக்கிய செய்தித் துறை, துணை முதலமைச்சருமான என்பதில் 'ருமான' என்பதை நீக்காமல் விட்டது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதையும் படிங்க: துணிகட்டி மறைக்க இது பாஜக மாடல் அல்ல; திராவிட மாடல்.. விமர்சனத்துக்கு மு.க ஸ்டாலின் பதிலடி!!