ஜூலை 12 அன்று நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வு, தமிழ்நாட்டில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. இத்தேர்வில் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் (VAO), ஜூனியர் அசிஸ்டண்ட், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிந்த பிறகு, விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்காக சேகரிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், சேலத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் அனுப்பப்பட்டபோது, அவை முறையாக சீல் வைக்கப்படாமல், ஆங்காங்கே உடைந்த நிலையில் இருந்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக, TNPSC ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்லப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது.

அட்டைப்பெட்டியில் விடைத்தாள் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது எடுக்கப்பட்டதா அல்லது முன்பே எடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. அட்டைப்பெட்டியில் விடைத்தாள்கள் கொண்டு வரப்படாது என்றும் பிற ஆவணங்களை அட்டைப்பெட்டியில் அனுப்புவது வழக்கம் என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. விடைத்தாள்கள் ட்ரங்க் பெட்டியில் வைத்து சீல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வில் குளறுபடி.. இதுதான் தமிழுக்கு கொடுக்குற முக்கியத்துவமா? சீமான் காட்டம்..!
இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படும் என்றும் விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வு விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்ட ட்ரம்ப் பெட்டியில் டிஎன்பிஎஸ்சி தலைமையகம் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக answer key வெளியாகி உள்ளது. விடைத்தாள்களின் பாதுகாப்பு மற்றும் மதிப்பீட்டு நடைமுறையின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்த நிலையில், சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.
இதையும் படிங்க: குரூப் 2, 2A தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்.. TNPSC அறிவிப்பு..!