அரசுப்பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் தான் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணபித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தி தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என்ற அடிப்படையில் பல்வேறு அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பத்தாரர்களுக்கான அறிவுரைகளையும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூலை 12 அன்று TNPSC குரூப் 4 தேர்வு, தமிழ்நாட்டில் 3,935 காலியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்டது. இத்தேர்வில் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் (VAO), ஜூனியர் அசிஸ்டண்ட், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பித்த லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிந்த பிறகு, விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்காக சேகரிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சேலத்தில் இருந்து சென்னைக்கு விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிகள் அனுப்பப்பட்டபோது, அவை முறையாக சீல் வைக்கப்படாமல், ஆங்காங்கே உடைந்த நிலையில் இருந்ததாக ஒரு தகவல் வெளியானது.
இதையும் படிங்க: Wow... திருப்தியான பயணம்... முதலிடம் பிடித்த சென்னை மெட்ரோ...!
இந்த சர்ச்சைக்கு பதிலளிக்கும் விதமாக, TNPSC ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, விடைத்தாள்கள் அட்டைப் பெட்டிகளில் கொண்டு செல்லப்படவில்லை என்று தெளிவுபடுத்தியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வை எழுதி இருந்தனர். தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதளத்தில் தங்களது பதிவு எண்களை உள்ளீடு செய்து முடிவுகளைப் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... தடையில்லா மின்சாரம்!... தமிழக அரசு உத்தரவு...!