2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை, ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் சொத்து விவரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பட்டியலில் திமுக பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
அண்ணாமலை வெளியிட்ட தகவல்களின்படி, டி.ஆர்.பாலு 10,841 கோடி ரூபாய் மதிப்பிலான 21 நிறுவனங்களை வைத்திருப்பதாகவும், அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக அமைந்ததாகக் கருதிய டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை 17-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு முதன்முதலில் 2023 ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா ஆனந்த் முன்னிலையில் ஆஜரானார். அப்போது அவருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்பட்டன. அண்ணாமலை, தமிழகத்தில் தனது நடைபயணம் காரணமாக விளக்கம் அளிக்க அவகாசம் கோரினார், இதனை அடுத்து வழக்கு ஆகஸ்ட் 24, 2023 அன்று ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அண்ணாமலை இரண்டாவது முறையாக 2023 அக்டோபர் 5 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது ‘திமுக ஃபைல்ஸ்’ குறித்து வெளியிட்ட கருத்துகளில் எந்தத் தவறும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

டி.ஆர்.பாலு தரப்பில், அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்றும், அவை தனது நீண்டகால அரசியல் வாழ்க்கையையும், பொதுமக்கள் மத்தியில் உள்ள மரியாதையையும் பாதிக்கின்றன என்றும் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
இதையும் படிங்க: ஐயா கவலைப்படாதீங்க! மனைவியின் பிரிவால் வாடும் டி.ஆர் பாலுவுக்கு கமல்ஹாசன் ஆறுதல்..!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி ஆர் பாலு, அண்ணாமலையை இடியட் எனக் கூறி பேசினார். அண்ணாமலை எழுப்பிய கேள்விகள் தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, அந்த இடியட் கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்து எப்படி வந்தது என்ற அண்ணாமலை கேள்வியை டி ஆர் பாலு மேடம் நிருபர்கள் கேட்டபோது கோபமடைந்தார். அண்ணாமலை உங்களிடம் கேட்க சொன்னாரா என்று கேட்டபோது, அவர் பேட்டியளித்து இருந்தார் என்று நிருபர் விளக்கம் அளித்தார். அப்போது, அண்ணாமலை என்னிடம் கேட்கட்டும் நான் பதில் சொல்லிக்கொள்கிறேன்., விடுயா, போயா என கூறிவிட்டு சென்றார்.
இதையும் படிங்க: அன்பால் அரவணைப்பால் வெற்றிக்கு வித்திட்ட உறுதுணை.. டி.ஆர் பாலுவின் மனைவி உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி..!