தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய பகுதியில் கடற்கரை ஓரம் 80 க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பாக தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இறால் குஞ்சுகள் தமிழக பகுதிக்கு மட்டுமல்லாமல் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த இறால் குஞ்சுகளை அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் இறால் பண்ணைகள் அமைத்து வளர்த்து வருகின்றனர்.
இந்த இறால் குஞ்சுகள் 3 மாதத்தில் இருந்து 4 மாதத்திற்குள் சுமார் 50 கிராம் அளவிற்கு இறால்கள் வளர்ந்து விடுகிறது. இந்த இறால்களை இறால் வியாபாரிகள் வாங்கிச் சென்று அதனை முறையாக பதப்படுத்தி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதில் குறிப்பாக அமெரிக்காவிற்கு மட்டும் 60 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறுகின்றனர். இதுபோல் இறால் ஏற்றுமதி மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி அன்னிய செலவாணி கிடைக்கிறது.
இந்த தொழிலில் இறால் குஞ்சு பொரிப்பாக தொழிற்சாலையில் உள்ள பணியாளர்கள், பண்ணைகளில் இறால்களை வளர்க்கக்கூடிய இடத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், இறால்களை வாகன மூலம் ஏற்றிச்செல்லும் ஊழியர்கள், இதனை பக்குவப்படுத்தும் தொழிலில் ஈடுபடுதல் உள்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; சிபிசிஐடி எடுத்த அதிரடி முடிவு...!
இதனால் இறால் தொழிலில் ஏற்றுமதி செய்ய பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் வரி விதிப்பால் தற்பொழுது மட்டும் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ரூ 1000 கோடிக்கு மேல் இறால்கள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளதாக இறால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் இத்தொழிலில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டு இந்த தொழிலை நம்பி இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இறால் உற்பத்தி தொழில் என்பது ஒரு சங்கிலி தொடர் போன்ற தொழிலாகும். இந்த தொழிலை மேம்படுத்த அமெரிக்காவை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. மேலும் பல்வேறு நாடுகளுக்கு இறால்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல் நம் நாட்டிலேயே இறால்களை அதிகளவில் விற்பனை செய்யும் வகையில் உள்நாட்டு சந்தை அதிகப்படுத்த வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கும் இறால்களை அனைத்து பொது மக்களும் வாங்கும் வகையில் அரசு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
இதுபோல் ஆந்திரா, ஒடிசா மாநிலத்தில் உள்ளது போல் இறால் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகள், அதனை வளர்க்கும் பண்ணைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு மானியம் வழங்க வேண்டும். இதுபோல் க இறால்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட இறால்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது இந்த வரியை 5 சதவிதமாக குறைக்க வேண்டும். இதுபோல் மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தினால் இறால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியும்,. இல்லையென்றால் இத்தொழில் பாதிக்கப்பட்டு இதனை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலை உள்ளதாக இறால் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.3,000 கோடி மதிப்பு.. ஏலத்திற்கு வரும் பிணையப் பத்திரங்கள்.. தமிழக அரசு அறிவிப்பு..!!