2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. மும்முனை போட்டியாக இருந்த தமிழகத்தில் விஜயின் அரசியல் வருகையால் நான்கு முனை போட்டியாக மாறி இருக்கிறது.
தமிழக வெற்றிக்கழகம் தற்போது தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படுகிறது. விஜய் மாற்று சக்தியாக அமைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது என சிலர் கூறிவரும் நிலையில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கூறப்பட்டு வருகிறது.

குறிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விஜயால் தாக்கம் ஏற்படும் என்றும் கூறியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட தமிழக வெற்றி கழகத்தோடு கூட்டணி அமைக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: நயினார் தலையில் இறங்கியது இடி... முக்கிய பாஜக மாவட்ட செயலாளர்கள் கூண்டோடு திமுகவில் ஐக்கியம்...!
தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும் என்று அப்போது தெரிவித்தார். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது என்றும், ஆனால் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம் எனவும் கூறினார். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க அமமுகவிற்கு பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அந்தக் கிழவனை மிதிச்சு..! ராமதாசை கொல்ல சொல்பவருக்கு அன்புமணி பாராட்டு… ஜி.கே. மணி பகிரங்க குற்றச்சாட்டு…!