2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் சுற்றுப்பயணங்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று நாகையில் விஜய் பிரச்சாரம் நடத்தினார். அப்போது விஜய் பிரச்சாரத்தின் போது, திமுக அரசை விமர்சித்து பேசினார். மேலும், அதிமுகவுக்கு மாற்று திமுக., இதுதான் காலம் காலமாக உள்ள தீர்ப்பு என தவெக தலைவர் விஜய் பேசி இருந்தார். திமுக - தவெக இடையேதான் போட்டி என்றும் கூறி உள்ளார்.
இதனிடையே, திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனது விஜய் பேசியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, விஜய் கூறுவது உண்மைதான் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே இரண்டாவது இடத்திற்கு போட்டி இருப்பதாக தெரிவித்தார். 2026 இல் அதிமுக தான் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்பார் எனவும் டிசம்பருக்கு பிறகு அதிமுகவிற்கு புதிய அலை உண்டாகும் என்றும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் பின்பு மக்கள் திரளுவார்கள் என்றும் தெரிவித்தார். திரைத்துறையிலிருந்து எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு பின்னால் பக்குவப்பட்ட தொண்டர்கள் திரண்டதாகவும், ஆனால் விஜய்க்கு பின்னால் திரளும் தொண்டர்களுக்கு பக்குவம் இல்லை என்றும் கூறினார். கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்றும் அதிமுக கூட விஜய் கூட்டணி வைக்கவில்லை என்றால் தமிழக வெற்றிக்கழகத்தை திமுக முடிந்துவிடும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜகவின் உத்தியை கையில் எடுத்த விஜய்... சாட்டையை சுழற்றிய ஆளூர் ஷா நவாஸ்!
விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மை என்றால் அதிமுகவிற்கு வரவேண்டும் என்று கூறினார். நடிகர் அஜித் அரசியலுக்கு வந்தால் இதைவிட இரண்டு மடங்கு கூட்டம் கூடும் என்றும் ரஜினிக்கு வராத கூட்டமா விஜயை பார்க்க வருகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் விட்ட புருடா… உண்மையை list போட்ட தமிழக அரசு… முடிச்சு விட்டாய்ங்க…!