தமிழக அரசியலின் நீண்டகால மர்மங்களில் ஒன்றாக விளங்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு விவகாரம், 2021 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக உறுதியளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்களை முழுமையாக விசாரணை செய்து, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்களை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் என்று. இந்த வாக்குறுதி, 2016-இல் ஜெயலலிதா இறந்த பிறகு எழுந்த பல சந்தேகங்களையும், அப்போதைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் மந்தமான போக்கையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்டது.
ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படவில்லை, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு அனுப்ப மறுக்கப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் எதிர்க்கட்சிகளும், ஜெயலலிதாவின் உறவினர்களும் மர்ம மரணம் என்று கூறி விசாரணை கோரினர்.
அதிமுக ஆட்சியிலேயே 2017-இல் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், அது பல தடைகளால் மெதுவாகவே நடந்தது. 2021 தேர்தலில் திமுக இதை முக்கிய தேர்தல் ஆயுதமாக்கியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்ம மரணம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: 2026 தேர்தல் கூட்டணி... இரவோடு இரவாக அதிரடி அறிவிப்பு... திடீர் ட்விஸ்ட் கொடுத்த டிடிவி தினகரன்...!
இந்த வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகம் தெரிவித்துள்ளது. 2021 தேர்தல் மேடைகளில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் எனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என முழங்கிய முதல்வர் ஸ்டாலின் 4 ஆண்டுகள் கடந்தும் ஏன் மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் திணறுகிறாரா அல்லது மக்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்புகிறாரா என்று கேள்வி எழுப்பி உள்ளது.
இதையும் படிங்க: 'அம்மா'வின் புகழை போற்றி வணங்குகிறேன்..!! தவெகவில் இணைந்த செங்கோட்டையன் உருக்கம்..!!