கரூர் கோரச் சம்பவம் மனதில் நீங்காத வடுவாக மாறியது. வரலாற்றுப் பெரும் கொடுமையாக உருவெடுத்துள்ளது. விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கடந்த சனிக்கிழமை இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்த நிலையில் இதுவரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆதவ் அர்ஜுனா மனு தாக்கல் செய்துள்ளார். தனது மனுவில் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்களுக்கு கரூர் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மதுரை மக்களே ஒரு ஹாப்பி நியூஸ்... மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடக்க போகுதாம்!
தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயோ அல்லது தாமோ சந்திக்க தடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். கரூர் சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என்றும் உள்ளூர் அரசியல்வாதிகளும் குண்டர்களும் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூரை உலுக்கிய மரண ஓலம்... மனதை ரணமாக்கும் துயரம்...!