தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நடிகர் விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சியின் அரசியல் பயணம், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
விஜய் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியது முதல்,. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்கவோ இல்லை என்று அறிவித்த விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.

தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் பொதுக்குழு கூட்டங்கள, செயற்குழுக் கூட்டங்கள், மாநாடு, சுற்றுப்பயணங்கள் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல 2026 இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றி கழகமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்.
இதையும் படிங்க: அடிக்கடி நிகழும் வெடி விபத்துக்கள்.. விருதுநகரில் 20 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..!
கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாபெரும் மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சாத்தூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளரிடம் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர்.
மாவட்டச் செயலாளர் சின்னப்பர் ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக கூறியும், முக்கிய நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு கொடுக்கவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தவெக மாநாடு "L-O-A-D-I-N-G".... ஆகஸ்ட் 25 ஆம் தேதிய விஜய் SELECT பண்ண "SECRET" தெரியுமா?