தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து இரண்டு நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளரான பரணி பாலாஜி என்பவருக்கு இன்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி விழுப்புரம் மாவட்டம் மணல் பூண்டி நான்கு முனை சந்திப்பில் இருந்து திருக்கோவிலூர் நகரின் மையப்பகுதிகள் வழியாக தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிறந்தநாள் விழா கொண்டாடுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் சாலையின் ஓரமாக வாகனங்கள் நிறுத்தி மாவட்ட செயலாளருக்காக காத்திருந்தனர்.

பின்னர், அவர் வந்த பிறகு பல்வேறு இடங்களில் சாலையின் மையப்பகுதியிலேயே பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் காரணமாக திருக்கோவிலூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலை விழுப்புரம் செல்லும் பிரதான சாலையான தென்பெண்ணை ஆற்று பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
இதையும் படிங்க: திருஷ்டி சுற்றிய வைகோ வீட்டு பணிப்பெண்..! சட்டென விஜய் செய்த செயல்..! குஷியில் துள்ளி குதித்த பெண்கள்..!
உரிய முன் அனுமதி பெறாமல் மாவட்ட செயலாளர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு சாலையில் அதிக அளவு நிர்வாகிகள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களோ மக்களுடைய பாதுகாப்பில் "நோ காம்ப்ரமைஸ்" என தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்தார்.
ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு நாட்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு மாவட்ட செயலாளருக்கு பிறந்தநாள் விழா என கொண்டாடி வரவேற்பு கொடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்..! முன்னாள் முதல்வரை சந்தித்த இந்நாள் முதல்வர்..! விஜய்க்கு திருமா. பாராட்டு..!