திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். வயது 32. வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அணியின் மாவட்ட இணை அமைப்பாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பகுதியில் டீக்கடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்த தாலுகா காவலர் வினோத் என்பவரிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அவர் மீது கடுமையான தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தாலுகா போலீசார் உடனடியாக அங்கு வந்து, காவலர் வினோத்தை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு வந்த மெகா முதலீடு..! ரூ.67,452 கோடி..! ஒரே மாநாட்டில் 97 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!!
மேலும், காவலர் மீது தாக்குதலில் ஈடுபட்ட வழக்கறிஞர் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்தனர். தற்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் போலீசாரை மதுபோதையில் தாக்கிய சம்பவமும், அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "100 நாட்களில் எழுதப்படும் புதிய பொருளாதார அத்தியாயம்"..! முதலீட்டாளர்கள் மாநாடு... தவெக பெருமிதம்..!!