மதுரையில் 500 ஏக்கர் பரப்பளவில் 2வது மாநாட்டிற்கு தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதனால் விஜய் வர உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் தான் களமிறங்கப் போகிறார் என்ற தகவல் தீயாய் பரவியது. உடனே தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் போஸ்டர் எல்லாம் ஒட்டி கொண்டாடுனாங்க. இதுக்கு காரணம் 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மதுரை மேற்கு தொகுதியில் நின்று தான் வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆனார். இதனால் இந்த தொகுதியை தவெகவினர் ராசியான தொகுதி என குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமின்றி மதுரை மேற்கு தொகுதியானது திமுக மற்றும் அதிமுகவின் கோட்டையாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதியில் நின்று விஜய் வெற்றி பெற்றால் செம்ம மாஸாக இருக்கும் என தவெக தொண்டர்கள் நினைக்கிறார்களாம். அதுமட்டுமின்றி அரசியலில் பல விஷயங்களில் எம்.ஜி.ஆரை பாலோப் செய்யும் விஜய், தொகுதி விஷயத்திலும் அதே முடிவைத் தான் எடுப்பார் என எதிர்பார்த்தனர். ஆனா இப்போது விஜய் உடைய பார்வை வட மாவட்டங்கள் மேல் உள்ளதாம். குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 4 தொகுதிகள் உள்ளன. இதில் கள்ளக்குறிச்சி தனித்தொகுதி என்பதால், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரிஷிவந்தியம் தொகுதி ஏற்கனவே விஜயகாந்த் நின்று வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அதைக்கூட டிக் அடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: சூடுபிடித்த அரசியல் களம்..! ஒதுக்கப்பட்ட ஓபிஎஸ்.. விஜயுடன் பேச்சுவார்த்தை..?
ஏனெனில் 2006ம் ஆண்டு விஜயகாந்த் தேர்தலில் களமிறங்கிய போது அவரும் மதுரையில் தான் போட்டியிடுவார் என தேமுதிகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக, பாமகவின் கோட்டையான விருதாச்சலத்தில் நின்று வெற்றி பெற்றார். தற்போது விஜயும் கேப்டன் வழியில் வடமாவட்ட தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கழட்டி விட்ட பாஜக... அடுத்த ஆட்டத்திற்கு தயாரான ஓபிஎஸ் - நாளை முக்கிய முடிவு?