திமுக, அதிமுகவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொண்டர்களின் அட்ராசிட்டி அளவு கடந்து சென்று கொண்டிருக்கிறது. கழிவறைகளில் இருந்த தண்ணீரை ஒரே நைட்டில் காலி செய்தது, தடுப்பு வேலிகளைக் கடந்து அங்கும், இங்கும் மாறி மாறி அமர்வது, போகும் இடத்திற்கு எல்லாம் சேரைத் தூக்கி தலைமேல் வைத்துக் கொண்டு சுற்றுவது, பெண்கள் அமருவதற்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு கேலரியை முற்றிலுமாக ஆக்கிரமித்தது என தவெக தொண்டர்கள் அடுத்தடுத்து சர்ச்சை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக மாநாட்டு திடல், பார்க்கிங் என கிடைக்கும் இடங்களில் தலைமையின் கட்டுப்பாட்டையும் மீறி மது அருந்தி விட்டு அட்ராசிட்டி செய்து வருகின்றனர்.
கடந்த முறை விக்ரவாண்டியில் நடந்த மாநாட்டின் போது விஜய் ராம்ப் வாக் மேற்கொண்டார். அப்போது அவர் மீது கொடிகளை தூக்கி வீசிய தொண்டர்கள் பாதுகாப்பைக் கடந்து வந்து அவருடன் செல்ஃபி எடுக்க முற்பட்டனர். அதுபோல இந்த மாநாட்டிலும் நடக்கக்கூடாது என்பதற்காக ராம்ப் வாக் மேடைக்கு இருபுறத்திலும் ஆள் உயரத்திற்கும் அதிகமான தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 8 அடி உயரமுள்ள தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே காலை முதலே ராம்ப் வாக் தடுப்பு கம்பிகளுக்கு அருகே இரண்டு புறமும் சேர் போட்டு அமர்ந்துள்ளனர். அதாவது விஜய் ராம்ப் வாக் வரும் போது, தடுப்பு கம்பிகள் மீது ஏறி அவருடன் செல்ஃபி எடுக்க திட்டமிட்டுள்ளனர். ராம்ப் வாக்கிற்கு அருகேயுள்ள கேலரியில் 2000 நபர்கள் மட்டுமே அமர இருக்கைகள் போடப்பட்ட நிலையில், தற்போது இரண்டுபுறம் 5000க்கும் மேற்பட்ட இருக்கைகளை தொண்டர்கள் தாங்களாகவே கொண்டு வந்து போட்டு அமர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: தவெக மாநாடு... வாட்டி எடுக்கும் வெயில்! 375 பேருக்கு முதலுதவி... தொண்டர்கள் தவிப்பு
எனவே விஜய் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் யாரும் தடுப்பு கம்பிகள் மீது ஏறிவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு கம்பிகளில் கிரீஸ் பூசப்பட்டுள்ளது. கிலோ கணக்கில் கிரீஸ் வாங்கி வந்து தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் முழுவதும் பூசியுள்ளனர்.
இதையும் படிங்க: “யாரை பார்த்து அணில்-ன்னு சொன்ன” - மதுரை மாநாட்டில் சீமானை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்...!