ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் கோவில் நிலங்களை மோசடியாக பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக கூறினார். போலி ஆவணங்கள் மூலம் ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார், கோவில் நிலத்தை முறைகேடாக அபகரித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். கோவில் நிலத்திற்கான மூல பத்திரத்தை காணவில்லை என்று முன்னதாக பதிவு செய்து பின்னர் அந்த இடத்தை அபகரித்திருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டி உள்ளார்.

கோவில் நிலத்தை மோசடியாக தனது பெயருக்கு மாற்றிய திமுக நிர்வாகி அந்த இடத்தில் கட்சி அலுவலகத்தையும் நடத்தி வருகிறார் என குறிப்பிட்டார். சாதாரண பகுதி செயலாளரால் ஒரு கோவில் நலத்தை முறைகேடாக ஆக்கிரமிக்க முடியுமா என்றும் இவருக்கு பின்னால் இருப்பவர் யார் எனவும் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் முக்கிய பிரமுகர்களின் தலையீடு இல்லாமல் இப்படி ஒரு மோசடி நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: இடைத் தேர்தல்... TVK கூட்டணி மாஸ்டர் பிளான்..! 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு..!!
கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான் நிலத்தை ஆக்கிரமித்தவரின் பின்னால் மிகப்பெரிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார். யார் சொல்லி யாருடைய ஆதரவில் இப்படி ஒரு மோசடி நடந்திருக்கிறது என விசாரணையில் கண்டறியப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு எதிராக செங்கோட்டையன் வைத்த புதிய அட்டாக்… தாராபுரத்தில் சூடு பிடித்தது தேர்தல் களம்!