முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில் முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசமாக, இரட்டை அர்த்தத்தில் பொருள்படும்படி சர்ச்சையாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் மீது தவெகவினர் இணையத்தில் கடுமையாக சாடி வருகின்றனர். இதுசார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தச் சூழலில், இன்று அதிகாலை நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச்செயலாளருமான என். ஆனந்த், உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?. அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?" என கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ஆயிரம் தடை வந்தாலும்... தீபத்தூண் ஒளிரும்..! நயினார் நாகேந்திரன் உறுதி..!!
மேலும் அமைச்சர் என். ஆனந்த், "Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத்தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான, நமது தமிழ்நாடு முதலமைச்சரை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை. அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கிறது. வேறு என்ன சொல்ல?. அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம். ஆனால், ஆபாசநிதிகளை...?" என உதயநிதியை ஆபாசநிதி என குறிப்பிட்டு கடுமையாக சாடி உள்ளார்.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர் என்றும்; யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என்றும் அவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் அவரது சோசியல் மீடியா பக்கத்தில் நள்ளிரவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: பொய் பிரச்சாரத்தின் உச்சம்..! நீட் போராட்ட வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசுதான்..! வதந்திகளுக்கு தவெக பதிலடி..!!