தமிழக வெற்றிக் கழகம் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தீவிரமாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 2026-ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு, 2 கோடி குடும்பங்கள் மற்றும் 2 கோடி உறுப்பினர்களை இணைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதுவரை 1.1 கோடி உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஐம்பெரும் கொள்கைகள் மற்றும் மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 2025-ல் நடைபெற உள்ளது. மேலும், செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரை விஜய் மக்களை நேரடியாகச் சந்திக்கும் திட்டம் உள்ளது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் பிரச்சாரம், உறுப்பினர் சேர்க்கை, மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தமிழ்நாட்டின் வாக்காளர் புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு செய்து, குறிப்பிட்ட பகுதிகளில் இளைஞர்கள், பெண்கள், மற்றும் கிராமப்புற மக்களை இலக்காகக் கொண்ட பிரச்சார உத்திகளை வகுக்கிறது.
இதையும் படிங்க: செப்டம்பரில் சுற்றுப்பயணம்...டெல்டா தான் டார்கெட்! ஸ்கெட்ச் போட்ட விஜய்...

இந்த நிலையில், வரும் 8 ஆம் தேதி பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் பயிற்சி பட்டறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தின் இரண்டு கோடி இல்லங்களில். இரண்டு கோடி கழக உறுப்பினர்கள் என்ற இலக்குடன் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இது குறித்துச் சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில், வருகிற 8 ஆம் தேதி காலை 10.35 மணியளவில், பயிற்சிப் பட்டறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த கழகத் தகவல் தொழில்நுட்ப அணியின் இரண்டு நிர்வாகிகளை மட்டும் மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்களுடன், கழகத்தின் மற்ற நிர்வாகிகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தம்பி விஜய்...அதிமுக கொள்கை எதிரியா? இல்லையா? கொஞ்சம் சொல்லிட்டு போப்பா ! திருமா டைரக்ட் அட்டாக்!