தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கியும் ஒருமனதாக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் முதல் வாரம் முதல் தமிழக முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் மண்டல வாரியாக மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. எந்தெந்த பகுதிகளுக்கு செல்வது, யார் யாரை சந்திப்பது, எங்கு கூட்டம் போடுவது, அதற்கான அனுமதி உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகள் முடிவு செய்து தலைமைக்கு அளிக்கவும் செயற்குழுவில் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தம்பி விஜய்...அதிமுக கொள்கை எதிரியா? இல்லையா? கொஞ்சம் சொல்லிட்டு போப்பா ! திருமா டைரக்ட் அட்டாக்!

இதனிடையே விஜய் டெல்டா மாவட்டங்களில்தான் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களை விடவும் டெல்டாவில் விஜய்க்கு அதிக ஆதரவு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் அதிமுக கடந்த சில ஆண்டுகளாகவே பின்னடைவை சந்தித்து, முக்குலத்தோர் சமூக வாக்குகள் மற்றும் சிறுபான்மையின வாக்குகளை பெற முடியாமல் தவித்து வருகிறது.

சிறுபான்மை மக்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஆதரவை இந்த சுற்றுப்பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டிற்கே காட்ட முடியும் என்பதாலும் கோஷ்டி பூசல் குறைவாக இருப்பதாலும் விஜய் தனது சுற்றுப்பயணத்தை முதலில் டெல்டா மாவட்டங்களில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூடி குழைய நாங்க DMK, ADMK இல்ல! எப்பவுமே பாஜக கூட்டணி கிடையாது.. அனல் பறக்க பேசிய விஜய்..!