தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் வெளியே ஒரு அறியாத உணர்ச்சிப் பெருக்கம் நிகழ்ந்தது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு, அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெறும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த எதிர்பார்ப்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவிந்தனர்.
அவர்களின் கண்களில் கண்ணீர், உதடுகளில் “விஜயை முதல்வர் ஆக்காமல் போக மாட்டோம்” என்ற முழக்கம். அது வெறும் அரசியல் நிகழ்வல்ல. விஜய் தொண்டர்களின் கனவுகளும், நம்பிக்கையும் ஒன்றிணைந்த உணர்ச்சிக் களமாக மாறியது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தவெக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக தகவல்கள் பரவின. தனித்து நின்று 108 தொகுதிகளில் வெற்றி என்ற பேச்சுகள், விஜய்யை முதலமைச்சராக்கும் கனவை தொண்டர்களிடம் தீவிரப்படுத்தின.

நேரு ஸ்டேடியம் பதவியேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்தது. இன்னும் ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கப்படாத நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று ரத்தாகியுள்ளது. நேரு ஸ்டேடியம் உள்ளே அலங்காரங்கள், ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. வெளியே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு 118 பேர் ஆதரவு தேவையா? விஜய் போடும் மாஸ்டர் ப்ளான்! ஆட்சி அமைப்பது உறுதி
சிலர் மணிநேரங்களாக, சிலர் நாட்களாகக் காத்திருந்தனர். அவர்களில் பலர் வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள். கிராமங்களில் இருந்து, நகரங்களில் இருந்து, கூட வெளி மாநிலங்களில் இருந்து கூட வந்த தொண்டர்கள் இருந்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருப்பது பெரும் கவலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. எங்கள் தளபதியை முதல்வராகப் பார்க்க வேண்டும்” என்ற ஆவலில் கண்ணீர் மல்க அழுதனர். “விஜயை முதல்வர் ஆக்காமல் போக மாட்டோம்” என்று கூறியும் கண்ணீர் விட்டனர்.
இதையும் படிங்க: விஜயை வீழ்த்த களமிறக்கப்படும் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரம்!! திமுக பிரம்மாஸ்திரம்! திருச்சி கிழக்கில் அதிரடி!