தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஈரோடு மாவட்டத்தில் இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். இது கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் நடத்தும் முதல் பெரிய பொதுக்கூட்டமாகும். பெருந்துறை தாலுகாவில் உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் உள்ள 19 ஏக்கர் தனியார் நிலத்தில் இந்த நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
போலீசார் அனுமதி வழங்கியுள்ள நிலையில், சுமார் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கரூர் சம்பவத்துக்குப் பிறகு விஜயின் மக்கள் சந்திப்பு பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு காஞ்சிபுரத்தில் உள்ளரங்கு சந்திப்பும், புதுச்சேரியில் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன. இப்போது ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பொதுக்கூட்ட வடிவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செங்கோட்டையன் சமீபத்தில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டு தவெகவில் இணைந்திருப்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேடை அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தனது சிறப்பு பிரசார வாகனத்தின் மேற்கூரையில் நின்று பேச உள்ளார். பாதுகாப்பு, மருத்துவ உதவி, கூட்ட நிர்வாகம் ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி சரவெடி தான்… ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு… கோவை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்ட விஜய்…!
14 வெளியேறும் வழித்தடங்கள், தனி பார்க்கிங் பகுதிகள், மருத்துவக் குழுக்கள் என அனைத்தும் தயாராக உள்ளன. அனுமதி அட்டை தேவையில்லை என்றும் கட்சி அறிவித்துள்ளது.தொண்டர்களின் உற்சாகம் அளப்பரியது. அதிகாலையிலிருந்தே சாரை சாரையாக தொண்டர்களும் பொதுமக்களும் கூட்டம் குவிந்து வருகின்றனர். விஜயமங்கலத்தில் குவிந்துள்ள தொண்டர்கள் உங்க விஜய் நான் வரேன் பாடலுக்கு ஆட்டம் பாட்டம் என உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர். விஜயின் பாடலுக்கு VIBE ஆகி உற்சாகமாக உள்ளனர்.
இதையும் படிங்க: நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!