தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் 3 ஆம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. இந்த அமர்வு புதிய அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பிரதிபலித்தது. முதல் நாள் ஆளுநர் உரையிடம் தொடங்கிய அமர்வு இரண்டாம் நாளில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இடம் பெற்றன.
மறைந்த முன்னோடிகளுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் திங்கட்கிழமையான இன்று மூன்றாம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக MLA- க்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். புதிய ஆட்சி அமைந்து 40 நாட்கள் கடந்து விட்டதாக கூறினார். புதிய ஆட்சி அமைந்து 40 நாட்களை கடந்துவிட்ட நிலையில் ஆளுநர் உரையில் தவெக ஆட்சியில் செய்த சாதனை இல்லாதது ஏமாற்றமே என்று கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!
ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒருமுறையும், தேசிய கீதம் 2 முறையும் மரபு மீறி பாடப்பட்டது என்று கூறினார். 2 முறை தேசிய கீதம் பாட வேண்டும் என இதற்கு முன்பும் ஆளுநர்கள் கோரிக்கை வைத்ததாகவும் கூறியுள்ளார்.திமுக ஆட்சியில் இதே கோரிக்கை வைத்தபோது அதை நிராகரித்து பேரவையின் இறையாண்மையை காத்தோம் என்றார். பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்பட்ட நிலையில் நமது டெரிட்டரியை ஏன் ஆளுநரிடம் கொடுத்துவிட்டீர்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் தனி தீர்மானம்..! முழு ஆதரவு... கிரீன் சிக்னல் காட்டிய திமுக..!!