தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியை தன் தொகுதியாகக் கொண்ட, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் வைத்திலிங்கம். அவரது அரசியல் வாழ்க்கை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்கி, கட்சியின் உள்ளக மாற்றங்கள், அதிகாரப் போராட்டங்கள் என பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளது. வைத்திலிங்கம் 2001ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவர் தொழில்துறை அமைச்சராகவும், பின்னர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இது அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் பெரிய உயர்வாக அமைந்தது. அதன்பிறகு 2006 மற்றும் 2011 தேர்தல்களிலும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தார்.

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் வைத்திலிங்கம். திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக தான் தங்களுக்கு தாய் கழகம் என்று தெரிவித்தார். ஓபிஎஸ் கூட்டணி விவகாரத்தில் தாமதப்படுத்தி வருவதாகவும், அதனால் தன்னை திமுகவில் இணைத்து கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்..!
அதிமுகவில் இருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அழைப்பு வந்ததாகவும் அதனை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை என்றும் சர்வாதிகாரமாக செயல்படுகிறது எனவும் குற்றம் சாட்டினார். இன்னும் பலர் திமுகவில் இணைவார்கள் வரும் 26 ஆம் தேதி தஞ்சையில் இணைப்பு விழா நடைபெற உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னை கூப்பிடல..! பிரதமர் பங்கேற்கும் மாபெரும் கூட்டம்..! ஓபிஎஸ் விளக்கம்...!