2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதற்காக தமிழக வெற்றிக் கழகம் பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் நடத்தியது. இதைத்தொடர்ந்து, திருச்சி, வேலூர், தர்மபுரி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த அந்த கட்சியின் விஜய் முடிவு செய்துள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. தற்போது விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களே இருப்பதால், மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்துவதற்கான பணிகளில் விஜய் இறங்கி உள்ளார்.
இதையும் படிங்க: எங்கள் இளைய காமராஜரே..! விஜயை ஆஹா.. ஓஹோ.. என புகழ்ந்த மாணவி..!

42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பில் விஜய் ஈடுபட உள்ள நிலையில், ஜூலை 2-வது வாரம் அல்லது ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து அவரது பயணம் தொடங்க உள்ளது.
இதையும் படிங்க: 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி..! மாமல்லபுரம் புறப்பட்டார் விஜய்..!