காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் இணைந்து, வாக்காளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தேர்தல் செயல்முறையில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் வாக்காளர் உரிமை கூட்டத்தை ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்வு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் ஒரு அரசியல் உத்தியாக அமைந்தது.
இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி போன்ற கட்சிகள், இந்த நீக்கங்கள் திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை என்று குற்றம்சாட்டின. இதற்கு ஆதாரமாக, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தங்களை மேற்கொள்ளும் முன் பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை என்றும், நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

பீகாரில் காங்கிரஸ் மற்றும் ஆர் ஜே டி கட்சிகள் இணைந்து வாக்காளர் உரிமை கூட்டத்தில் தனது தாயை அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். இறந்த தனது தாயை அவமதிப்பு செய்து விட்டதாகவும், நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய்மார்களையும் அவமதித்து உள்ளதாகவும் கூறினார். தனது தாயாருக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விழிப்புடன் செயலாற்றுமா விடியல் அரசு? ஐயா வைகுண்டர் சர்ச்சை கேள்வியால் நயினார் கடும் கோபம்
இந்த நிலையில் பிரதமர் மோடியின் தாயாரை அவதூறாக பேசிய இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆர் ஜே டி கட்சியினர் மன்னிப்பு கேட்க வேண்டும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார். ஒருவரை அரசியல் ரீதியாகத் தாக்க அவரது அன்னையை இழிவுபடுத்தி ஆனந்தமடையும் குரூரப் போக்கு எவ்வளவு கொடூரமானது என்றும் பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா என்ன எனவும் கேள்வி எழுப்பினார். மறைந்த ஒருவரைக் குறித்து கொச்சையாகப் பேசுவது தான் காங்கிரஸ் கட்சியினரின் மாண்பா என்றும் வயதான பெண்மணியைத் தங்கள் கட்சிக் கூட்டத்தில் இழிவுபடுத்தியதை எதிர்த்துக் குரல் கொடுக்காத இந்தியா கூட்டணியினர் தான் நம் இந்திய மகள்களையும் பாரதத் தாயையும் காக்கப் போகிறார்களா எனவும் சாடினார்.
பிரதமரின் மறைந்த தாயாரை அவமதித்த இச்சம்பவத்திற்கு உடனடியாக இந்தியா கூட்டணித் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து பாரதத்தின் அனைத்துப் பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: NO DOUBT... டிடிவி தினகரன் எங்க கூட்டணியில தான் இருக்காரு... நயினார் பளிச் பதில்