தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதை எடுத்து தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் வசதியாக சிறப்பு முகாம் நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அதேபோல வரும் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதியுடைய வாக்காளர்கள் மற்றும் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவத்தை உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். உறுதிமொழி படிவத்தில் கடந்த 2002 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்களது குடும்பத்தினரின் பெயரை கண்டிப்பாக பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.
அத்துடன் வயதுக்கான சான்று மற்றும் இருப்பிடத்திற்கான சான்று ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தங்களின் தெரிவுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகள் மட்டுமே படிவங்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். வேறு வாக்குச்சாவடி படிவங்களை சமர்ப்பிக்க கூடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எவரும் முன்முடியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சிபனை தெரிவிக்கவோ ஏற்கனவே உள்ள பெயரை நீக்கவோ படிவம் ஏழு மூலம் விண்ணப்பிக்கலாம். முகவரி மாற்றம் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய விரும்புவோர், உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என குறிப்பிடுவது போன்ற கோரிக்கை உடையவர்கள் படிவம் எட்டு மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: SIR... புதிய வாக்காளர்களுக்கு சிக்கல்.. மாட்டுனா ஜெயில் தானாம்...!
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!