வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் அமுதா பேட்டியளித்தார். அப்போது, அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை அறிக்கை குறித்து விவரித்தார். கடல் பகுதியில் 3 சுழற்சிகள் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக கூடும் என்று கூறினார். அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவித்தார்.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது என்று கூறினார். அடுத்த 72 மணி நேரத்தில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது என்றும் தெரிவித்தார். நான்கு இடங்களில் அதிக கனமழையும் 76 இடங்களில் கனமழையும் பதிவாகி இருப்பதாக அமுதா குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழை இயல்பில் இருந்து ஐந்து சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என்றும் கூறினார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைத்து திரும்ப அறிவுறுத்தினார். தமிழகம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: அலற விடும் ஆரஞ்சு அலர்ட்… லிஸ்ட்- ல சென்னையும் இருக்காம்..! வெளுக்க போகுது மழை…!
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படுவதாகவும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் விழுப்புரம் செங்கல்பட்டு மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 29ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படுவதாகவும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 30-ம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். டிசம்பர் மாதத்திற்கான வானிலை எச்சரிக்கை நவம்பர் 30ஆம் தேதிக்குள் தெரியவரும் என்றும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சென்னையில் மழை பொழிவு உள்ளிட்டவை எப்படி இருக்கும் என்பது டிசம்பர் மாதத்திற்கான வானிலை அறிக்கை அடிப்படையில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காட்டாற்று வெள்ளம் போல் கரைபுரண்டோடும் தாமிரபரணி தண்ணீர்... மூழ்கும் நிலையில் முருகன் கோவில்...!