கணவரை அரிவாளால் வெட்டிய பாஜக நிர்வாகி உள்ளிட்டோரிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளுடன் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
கோவை கவுண்டம்பாளையம் காந்திநகரை சேர்ந்தவர் மகேந்திர பிரபு (27). பைனான்ஸ் வேலை செய்து வருகிறார். இவருக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு பிரிவு நிர்வாகியான அசோக்குமார் என்பவருக்கு முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அசோக்குமார் மேலும் சிலருடம் அரிவாளுடன் வந்து மகேந்திர பிரபு வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது இரு தரப்பினர் அரிவாளலால் வெட்டிக் கொண்டாடதாக கூறப்படுகிறது. இதில் மகேந்திரபிரபு கைவிரல்கள் துண்டாகியுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மகேந்திர பிரபு கவுண்டம்பாளையம் போலீசில் கொடுத்த புகார் அடிப்படையில் பாஜக விளையாட்டு மற்றும் திறன்மேம்பாடு பிரிவு நிர்வாகி அசோக்குமார், சரவணன், வசந்தகுமார், பிரவீன் ஆகிய நான்கு பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சரவணன், பிரவீன் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: கிடப்பில் மசோதா... காலம் தாழ்த்தும் ஆளுநர்... தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு...!
மேலும் தலைமறைவாக உள்ள பாஜக நிர்வாகி அசோக்குமார், மற்றும் வசந்தகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர். மேலும் சரவணன் கொடுத்த புகார் அரிவாளாலால் வெட்ட முயன்றதாக மகேந்திரபிரபு மற்றும் அவரது சகோதரர் மணிபாரதி மீது வழக்கு பதிவு செய்து மணிபாரதியை கைது செய்தனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி அசோக்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், தனக்கும் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மகேந்திரபிரபு மனைவி கவுசல்யா தனது இரண்டு குழந்தைகளுடன் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். மேலும் அசோக்குமார் வீட்டிற்கு வந்த போதே நான் பாஜகவில் உள்ளதால் என்னை ஏதும் செய்ய முடியாது என கூறியதோடு, தனக்கும் குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கவுசல்யா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முகாம் நடத்த ஸ்கூல் லீவ் விடுவீங்களா? எதுக்கு இந்த வெத்து விளம்பரம்… அண்ணாமலை விமர்சனம்…!